என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆஸ்திரேலியா ஓபன்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா ஓபன்"
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #AustralianOpen #RogerFederer
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.
இதில், டிஸ்டிஸ்பசிடம் ரோஜர் பெடரர் 7 - 6, 6 - 7, 5 - 7, 6 - 7 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AustralianOpen #RogerFederer
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை எதிர்கொண்டார்.
இதில் ரபேல் நடால் தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். #AUSOpen #AndyMurray
இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. 3 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள அவர் வருகிற 14-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியோடு தான் ஓய்வு பெற முடிவு செய்து இருப்பததாக தெரிவித்தார். அப்போது அவர் கண் கலங்கினார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிதான் என்று கடைசி தொடராக இருக்கும் என கருதுகிறேன். இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எனது சொந்த நாட்டில் நடக்கும் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால் நீண்ட காலமாக வலியால் அவதிப்படுகிறேன். அந்த வலியுடன் அடுத்த 5 மாதங்களுக்கு விளையாட முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி எனது கடைசி தொடராக இருக்கலாம் என்று கருதுகிறேன்’’ என்றார்.

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் முதல் ஆட்டத்திலேயே நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #SimonaHalep
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டம் என்று கருதப்படும் சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லெய்க் பேர்ட்டி-யை எதிர்கொண்டார்.
இதில் சிமோனா ஹாலேப் 4-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2-ம் இடம் பிடித்த சிமோனா, அக்டோபர் மாதம் நடைபெற்ற டென்னிஸ் இறுதித் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X